business

img

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்த்தப்பட்டு ரூ.1,964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து ஒவ்வொரு மாதம் சிலிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள், எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, நவம்பர் மாதம் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்த்தப்பட்டு ரூ.1,964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.818.50 ஆக தொடர்கிறது. மேலும், 5 கிலோ இலவச வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.